Friday, July 1, 2011

புருலியா ஆயுத மழை! இந்தியாவுக்கு டென்மார் கொடுத்த அடி!

JUNE 01, புதுடில்லி: "புருலியா ஆயுத வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கிம் டேவியை, இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது' என, டென்மார்க் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில், 1995ல் விமானத்தில் இருந்து, ஏராளமான ஆயுதங்கள் கீழே போடப்பட்டன. ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் என, ஏராளமான ஆயுதங்கள் வீசப்பட்டன.

இந்த ஆயுதங்கள் ஆனந்த மார்க்கம் என்ற ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்திற்கு போடப்பட்டது. இந்த ஆனந்த மார்க்கம் என்ற இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் துணை அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், டென்மார்க்கை சேர்ந்த கிம்டேவி என்பவருக்கு தொடர்பு இருப்பதை, சி.பி.ஐ., கண்டு பிடித்தது. அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சில நிபந்தனைகளின் பேரில், கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க டென்மார்க் அரசு முன்வந்தது.

கிம் டேவிக்கு தூக்கு தண்டனை விதிக்க கூடாது என்பது முக்கிய நிபந்தனை. டென்மார்க் அரசின் இந்த முடிவை எதிர்த்து, கிம் டேவி சார்பில் விசாரணை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த விசாரணை கோர்ட், கிம் டேவியை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என, தீர்ப்பளித்தது.

இதையடுத்து, டென்மார்க் ஐகோர்ட்டில் இந்த வழக்கு மேல் முறையீடுக்காக சென்றது. இதில், கிம் டேவியை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்ற விசாரணை கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்வதாக தெரிவித்த ஐகோர்ட், டென்மார்க் அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


ஐகோர்ட் உத்தரவில்,"இந்தியாவில் உள்ள சிறைகளின் நிலை மற்றும் மனித உரிமை பிரச்னை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிம் டேவி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அங்கு அவர், விசாரணை என்ற பெயரில் கொடுமைக்கு ஆளாகலாம்' என, உத்தரவிட்டது. இந்த தகவலை தெரிவித்த சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர், ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, டென்மார்க் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாக கூறினார்.


No comments:

Post a Comment