Thursday, July 7, 2011

மெக்சிகோவில் சிறையில் இருந்த கணவரை சூட்கேஸில் வைத்து கடத்திய பெண் கைது

செதுமால்: மெக்சிகோவில் சிறையில் இருக்கும் கணவரைப் பார்க்கச் சென்ற பெண் அவரை சூட்கேஸில் வைத்து வெளியே கொண்டு வர முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

மெக்சிகோவைச் சேர்ந்தவர் ஜுவான் ராமிரெஸ் டிஜேரினா. அவரது மனைவி மரியா டெல்மார் அர்ஜோனா (19). சட்விரோதமாக ஆயுதம் கடத்திய வழக்கி்ல் ராமிரெஸுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் கரீபியன் மாகாணத்தில் உள்ள செதுமால் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் சிறையில் தண்டனைக் காலத்தை கழித்து வருகிறார்.


இந்நிலையில் கணவரைப் பார்ப்பதற்காக மரியா செதுமால் சிறைக்கு சென்றார். திரும்பிச் செல்கையி்ல ஒரு பெரிய சூட்கேஸை இழுக்க முடியாமல் இழுத்துச் சென்றார். அவர் ஒரு வித பதற்றத்துடன் காணப்பட்டார். இதைப் பார்த்த சிறைக் காவலர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

சூட்கேஸில் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு மரியா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். உடனே போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தனர். பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சூட்கேஸுக்குள் ராமிரெஸ் தனது கை, கால்களை மடக்கி லாவகமாக படுத்திருந்தார்.

இதையடுத்து போலீசார் சிறைக் கைதியை கடத்திச் செல்ல முயன்ற குற்றத்திற்காக மரியாவை கைது செய்தனர்.


No comments:

Post a Comment