Monday, July 11, 2011

பிரபல்யமாகாத சில WEB BROWSER -கள் பற்றி


Internet Explorer -க்கு  அடுத்து  Fire Fox, Chrome, Opera, Safari போன்ற பிரவுசர்கள்  தான் உள்ளன என்று நம்மில் பெரும்பாலனவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால்,  இன்டர்நெட் உலகில் மேலும்  பல பிரவுசர்கள் - மேற்குறிப்பிட்ட பிரபல்யமான  பிரவுசர்களை விட - பல விஷயங்களில் நேர்த்தியாக  செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன  என்பதே உண்மை. 
அந்த வரிசையில் ....

1.அரோரா (Arora): ஒரு Open Source Programe  ஆகிய இது -  Windows, Mac, Linux போன்ற  ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கக் கூடியது.  POP UP விளம்பரங்களைத் தடுப்பது, PRIVATE BROWSING, பிரவுசிங் தகவல்களைக் கையாள்வது போன்ற  ஒரு சாதாரண  பிரவுசருக்குத்தேவையான  பல அடிப்படை வசதிகளை தன்னகத்தே  கொண்டுள்ளது. CHROME பிரவுசரின்  தொழில் நுட்பத்தினையே இந்த பிரவுசரும் பயன்படுத்துகிறது. கூகுள் தொடர்பே வேண்டாம் என்பவர்களுக்கு இது ஒரு மாற்று பிரவுசராகும். கடந்த  ஏப்ரலில் தான் அப்டேட் செய்யப்பட்டது. இதன் சைஸ் 10.2 MB ஆகும் .....  இலவசமும் கூட!
இணைய தள முகவரி:
http://code.google.com /p/arora/downloads/list

2.கேமினோ (Camino): MAC operating சிஸ்டத்தில் மட்டும் இயங்கும் பிரவுசரான இது,  ஜெக்கோ தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. MAC பிளாட்பாரத்தில் இயங்கும் அனைத்து பிரவுசர்களுக்கும் இது ஒரு மாற்று. எளிமையானது;  மிகச் சிறிய அளவே  இடம் பிடித்து இயங்கும் பிரவுசர். நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும் இதில் இருக்கின்றது.
இணைய தள முகவரி : http://caminobrowser. org/download/


3. பிலோக் (Flock): WINDOWS, MAC மற்றும் LINUX  சிஸ்டங்களில் இயங்கக்கூடியது.  FIREFOX பிரவுசரின்  அடிப்படையில் இயங்குவதால் FIREFOX பிரவுசரை உபயோகித்தவர்கள் இதனை வெகுஎளிதாக கையாளலாம். FIREFOX போன்று பாதுகாப்பான பிரவுசிங் அனுபவத்தினையும் தருகிறது. Face Book, Twitter, My Space, You Tube, Flicker, Blogger, G Mail மற்றும் Yahoo Mail போன்றவற்றிற்கு நேரடியான  இணைப்பையும் வழங்குகிறது.  Photo Sharing, Updated News, Search Engine ஆகியவைகளோடு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் அளவு 12.8 M.B.
இணைய தள முகவரி: http://www.flock.com

4. கே–மெலான் (KMeleon): WINDOWS சிஸ்டத்தில் மட்டும் இயங்கும் ஓர் open source பிரவுசரான  இதுவும்,  ஜெக்கோ தொழில் நுட்பத்திலேயே  செயல்படுகிறது. இதனை நம் வசதிக் கேற்றவாறு  SET செய்யலாம். நமக்குத் தேவைப்படும்  தளங்களை மிகவும் வேகமான முறையில் பெற்றுத் தருகிறது.  ஆங்கிலம் உட்பட ஆறு ஐரோப்பிய மற்றும் ரஷ்ய மொழிகளில் இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இதன் அளவு 5.8 M.B.
இணைய தள முகவரி: http://kmeleon.sourceforge.net/
5. மேக்ஸ்தான் (Maxthon): இதுவும்  WINDOWS இயக்கத்திலேயே  செயல்படுகிறது. சீனாவில் மிகவும் பிரபல்யமான  பிரவுசர்.  இதன் அளவு 6.4 M.B. இலவசமும் கூட. இதன் பிரவுசிங் மிகவும்  வேகமாக உள்ளது. ஒரு பிரவுசருக்கு தேவையான எல்லாவித   அடிப்படை வசதிகளும்  இதில் உள்ளது.
இணைய தள முகவரி:  http://www.maxthon.com /download.htm
6. பேல் மூன் (Pale Moon): WINDOWS ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில்  செயல்படுகின்ற இதுவும்  ஜெக்கோ தொழில் நுட்பத்திலேயே  இயங்குகிறது. FIREFOX பிரவுசரின்  கட்டமைப்பை  கொண்டுள்ளதால் FIREFOX  -இன்  Extensions, Theams   மற்றும் Personas போன்றவை   இந்த பிரவுசரிலும் செயல்படுகின்ற   விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற  பிரவுசர்களை விட இப்பிரவுசர் 25% கூடுதல் வேகம் கொண்டது  என்று இந்நிறுவனத்தின்  அறிக்கை கூறுகிறது. இதன் அளவு 7.7 M.B. 
இணைய தள முகவரி: http://www.palemoon.org

ஆக, பிரபல்யம் என்று  பெயர்வாங்கிய Internet Explorer, Fire Fox, Chrome போன்ற  பல பிரவுசர்கள், இன்றைய காலகட்டத்தில்  பலவகையான  வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருவதை காணும் போது  மேற்குறிப்பிட்ட அதிக பிரபல்யமாகாத  இந்த  பிரவுசர்களையும் உபயோகிப்படுத்திப் பார்த்தால் வைரஸ்களின்  தாக்கம் குறைவாகவே தான்  இருக்கும் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment