Saturday, July 2, 2011

பொது நிகழ்சிகளில் மரக்கன்று நடுவது நல்ல முன்னுதாரணம்!

JULY 02, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், பிற்படுதப்பட்டவர் களுக்ககவும் ஒரு மாற்று அரசியலை முன்வைத்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட SDPI யின் 3 ஆண்டு தொடக்க விழா இந்தியா முழுவதும் கொடியேற்று விழா மற்றும் ஒரு லட்சம் மரகன்றுகள் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக நமது ஊர் ஏர்வாடியில் நெல்லை மாவட்ட தலைவர் தலைமையில் நான்கு இடங்களில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.




சிந்திக்கவும்: ஒவ்வொரு பொது நிகழ்சிகள், விழாக்கள் இவற்றில் இப்படி மரம்நடும் நிகழ்ச்சியை இணைத்து அரசியல் கட்சிகள், மற்றும் பொதுநல அமைப்புகள், தொண்டு அமைப்புகள் செய்ய ஆரம்பித்தால் இந்தியா ஒரு பசுமை நாடாக மாறும். நல்ல ஒரு முயற்சி வாழ்த்துக்கள். அதுபோல் நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வாங்க வேண்டும் என்று அரசு எப்படி சட்டம் வைத்துள்ளதோ அதுபோல் ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறும்போதும் இத்தனை மரங்கள் நட்ட வேண்டும் என்ற நிபந்தனையோடு அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment