Wednesday, July 6, 2011

சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பரில் தொடங்கும்-முஸ்லிம்கள் செய்யவேண்டியது:

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று இந்தக் கணக்கெடுப்பின் போது சாதியின் உட்பிரிவுகளும் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை விவரம் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே வாழுவோர் கணக்கெடுப்பும் நடத்த மத்திய மந்திரி சபை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழுவோர் கணக்கெடுப்பு 12ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்களை அமல்படுத்தும் வகையில் எடுக்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு பணி அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.


இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை முதல்முதலாக திரிபுரா மாநிலம் கடந்த வாரம் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வரும் டிசம்பர் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளன.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வரும் ஊழியர்களிடம் ஏற்கனவே மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும். சாதிவாரி கணக்கெடுப்புக்கான விண்ணப்பத்திலும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களின் பெயர் மற்றும் இதர விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த விண்ணப்பத்தில் கூடுதலாக விவரங்களை ஊழியர்கள் குறித்துக்கொள்வார்கள்.


மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர் விடுபட்டவர்களிடம் அனைத்து விவரங்களும் பெறப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு விண்ணப்பத்தில், பெயர், பாலின், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, திருமண நிலை, தொழில், வருமானம், சொத்து, சொந்த வீடா, வாடகை வீடா? என்ன சாதிப்பிரிவு? (ஓ.சி., பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்..டி.) சாதியின் உட்பிரிவு, உதாரணத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் என்றால் எந்த சாதி என்ற விவரம், சாதியைக் குறிப்பிட விருப்பம் இல்லை என்றால் நோ காஸ்ட் (என்.சி.) என்ற விவரம் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படும்.

டிசம்பர் மாதம் தொடங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு பணி 40 நாட்களில் முடிக்கப்படும்.

முஸ்லிம்கள் செய்யவேண்டியது:


தமிழ் நாட்டில் சூன்-டிசம்பர் மாதத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது...
அதில் "மதம்" என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்று குறிப்பிடவும்.... "முஸ்லிம்" என்பது பதிவது தவறு....



இன்னும் "ஜாதி" என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்...
·        லெப்பை
·        செய்யது
·        தக்கனி முஸ்லிம்
·        அன்சர்
·        ஷேக்
·        மாப்பிள
·        துத்திகோலா
முக்கிய குறிப்பு:
     ராவுத்தர்மரைக்காயர் உள்ளிட்டோரும் "லெப்பை" என்றே குறிப்பிடவும்....
     ஜாதியை குறிப்பிடும்போது "சாயிபுபட்டாணிஷரீப்பரிமா என்றெல்லாம் குறிப்பிடாதீர்....
இத்தகவலை தங்களூர் நிர்வாகிகளிடம் (நட்டன்மை & பஞ்சாயத்) தெரிவித்து ஊர் மக்கள் பயனடைய ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்...


--
முஸ்லிம் மெயில்ஸ் குழுமம் வாயிலாக வெளிவரும் எல்லா ஆக்கங்களுக்கும் அனுப்புனரே பொறுப்பாளியாவார். தொடர்புக்கு muslimmails@gmail.com



No comments:

Post a Comment