Saturday, July 9, 2011

எகிப்தில் இன்று மிக பெரிய ஆர்பட்டத்திற்கு அழைப்பு

 எகிப்தில் இன்று வெள்ளிகிழமை  10 இலட்சம் மக்களை கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு ‘march of a million people’ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எகிப்து புரட்சி ஏற்பட்டு ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையில் புரட்சியின் சில இலக்குகள் மட்டும் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்பாட்டத்திற்கு பிரதான அனைத்து அமைப்புகளும் ஆர்ப்பாட்ட அழைப்பை விடுத்துள்ளது.  இஹ்வானுல் முஸ்லிமீன், ஏப்ரல் 6 இயக்கம் , ஸலபிகள் அமைப்பு , ‘We Are All Khalid Said’ என்ற Facebook குரூப் , மற்றும் அரசியல் கட்சிகள் , சுவஸ் கால்வாய் தொழிலாளர்கள் அமைப்பு போன்ற பிரதான அமைப்புகள் இதற்கான அழைப்பை விடுத்துள்ளதால் இது பாரிய ஆர்பாட்டமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது விரிவாக

இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பும் தஹ்ரீர் -விடுதலை- சதுக்கத்தில் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அங்கு ஏதும் அரசியல் கட்சிகள் சார்பான கோஷங்களை போடவோ சுலோகங்களை தாங்கவோ கூடாது என்று தெரிவித்துள்ளது.
இன்று ஜும்மாஹ்வின் பின்னர் எகிப்து தலைநகர் கெய்ரோவின் தஹ்ரீர் -விடுதலை- சதுக்கத்தில் மக்கள் ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற சிறிய சிறிய மக்கள் ஆர்பாட்டங்களை இராணுவ நிர்வாகம் கடுமையாக கையாண்டமையை கண்டித்தும், ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரின் கூட்டாளிகள் சரியான நீதி விசாரனைகளுக்கு உட்படுத்தப் படுவதில் ஏற்படும் தாமதம் குறித்தும்,மேலும் பல விடையங்கள் குறித்தும் இந்த ஆர்பாட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment