Sunday, July 3, 2011

முஸ்லிம் சமுதாயத்தின் முதல் தொலைகாட்சி சேனல் மூன் டி.வி. / Moon TV



வல்ல அல்லாஹ் தங்களுக்கு அனைத்து நலனும் வளனும் நல்கியருளத் துஆ செய்கிறோம்.
 
பல்வேறு சமயச் சகோதரர்களும் தமிழ்த் தொலைக் காட்சி சேனல்களைச் சொந்தமாக நடத்திவரும் சூழலும், அவர்கள்தம் கருத்துகளை அச் சேனல்களின் வாயிலாக வெளிப்படுத்தும் நிலையும் கண்டு நமது சமுதாயத்தைச் சார்ந்தவர் நடத்தும் சேனல் ஒன்றுகூட பெரிய அளவில் உலகம் தழுவிய வகையில் இல்லையே என்ற குறை வெகுகாலமாகவே தமிழக இஸ்லாமியருக்கு இருந்து வந்தது.
 
தமிழக முஸ்லிம்களின் வாட்டத்தையும் தேட்டத்தையும் போக்கும்வகையில் மூன் தொலைக் காட்சி (Moon T.V.) கடந்த 20-03-2009 முதல் தனது 24 மணிநேர ஒளிபரப்பை வெற்றிகரமாகத் தொடங்கிச் செயல்பட்டுவருகிறது.
 
இஸ்லாமியர்களால் இஸ்லாமியர்களை முதன்மைப்படுத்தி மூன் டி.வி. நிறுவனமும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
  • இறைவனின் திருப் பெயரால், 
  • இஸ்லாமிய கீதங்கள், 
  • இன்று ஒரு நபிமொழி, 
  • சிந்திப்போமா, 
  • கி.பி.570 முதல், 
  • எளிய முறையில் திருக் குர்ஆன் கற்போம், 
  • இணையிலா இறைமொழி, 
  • இறைவனிடம் கையேந்துங்கள், 
  • கிராஅத் போட்டி, 
  • தீன் ஒளி, 
  • ஷரீஅத் சட்டங்கள், 
  • இறை நேசர்கள் 


முதலிய பல நிகழ்ச்சிகள் மிக அருமையாகவும் சுவையாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
  • இளைஞர்கள் சுய முன்னேற்றம்,
  • ஆளுமை வளர்ச்சி, 
  • கல்வி, 
  • மருத்துவம், 
  • தொழில் முன்னேற்றம், 
  • மருத்துவம், 
  • மகளிர் அழகுக் கலை, 
  • சமையல், 
  • செய்திகள், 
  • முக்கிய நிகழ்வுகள் 
முதலான பல்வேறு பொது நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன.
 
அமீரகத்தில் துபை அரசின் அதிகாரப்பூர்வ கேபிள் நெட்வொர்க் அமைப்பான இ-விஷன் வழியாக மூன் டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
 
இலங்கை உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வசிக்கும் எண்ணற்ற தமிழர்களால் கண்டுகளிக்கப்படும் தொலைக் காட்சியாக மூன் டி.வி. விளங்குகிறது.
 
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாகப் பன்னூற்றுக் கணக்கான ஊர்களில் மூன் டி.வி. தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொண்டிருக்கிறது.
 
உலகெங்கிலும் வாழ் தமிழர்களுக்குக் குறிப்பாகத் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் மூன் டி.வி.க்குப் பேராதரவும் பெரும் ஒத்துழைப்பும் தரவேண்டியது நமது கடமையும் பொறுப்புமாகுமென்பதைத் தாங்கள் நன்குணர்வீர்களென நம்புகிறோம்.
 
தமிழகம்வாழ் அன்புச் சகோதரர்களும் கடல் கடந்து கடமையாற்றும் நமது அருமைச் சகோதரர்களும் தங்களது சொந்த ஊர்களில் மூன் டி.வி. நிகழ்ச்சிகளை நம் உற்றாரும் உறவினரும் மற்ற நண்பர்களும் கண்டு பயன் பெறும் வகையில் தங்கள் ஊர்களிலுள்ள கேபிள் நெட்வொர்க் அன்பர்களை அணுகி மூன் டி.வி. தெரியும் வகையில் ஏற்பாடு செய்துதந்துதவக் கேட்டுக் கொள்தல் வேண்டுமெனப் பணிவன்போடு விழைகிறோம்.
 
கேபிள் நெட்வொர்க் அன்பர்களிடம் தெரிவிக்க வேண்டிய தொழில் நுட்ப விவரங்கள்:
------------------------------------------------------------------------------------------------------------------------
Satellite: INSAT-2E @ 83 Degrees, Band: C, Downlink Frequency: 4031 MHz
Symbol rate: 7.440 MSPS, FEC: 7/8, Modulation: QPSK,  Polarization: Vertical
------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்கூறு நல்லுலகத்தினர்அனைவரும் குறிப்பாகத் தமிழறிந்த முஸ்லிம்கள் மூன் டி.வி. நிகழ்ச்சிகளைக் கண்டு பெரும் பயன் பெற்றிடும் வகையில் மேற்கூறிய பணியை ஒரு சமுதாயச் சேவையாகவே ஆற்றி உதவிட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
வசதியும் வாய்ப்புமுடைய சமுதாயப் புரவலர்கள், வணிகப் பெருந்தகையினர் நிகழ்ச்சிகளுக்கு Sponsorship மற்றும் விளம்பரங்கள் தந்துதவவும் விழைகிறோம்.
 
இஸ்லாமியர்களால் இஸ்லாமியரை முதன்மைப்படுத்தி நடைபெற்றுவரும் நல்லதோர் தொலைக் காட்சி நிறுவனம் நிலைபெற்று நீடுபுகழ் உற்று நெடிய பயன் சமுதாயத்திற்குத் தொடர்ந்து வழங்கிட அன்புகூர்ந்து அவசியம் உதவுக.
 

No comments:

Post a Comment