Tuesday, June 14, 2011

போலீஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 14 வயது சிறுமி!


JUNE 14, உத்தரபிரதேச மாநிலம் லக்மிபூர் பகுதியில் கடந்த 10.06.2011 அன்று 14 வயது மாணவி ஒருவர் மாயமானார். 

இதற்கிடையே அவர் நிகாஷன் போலீஸ் நிலையம் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.


 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக அவரது தாயார் புகார் கூறினார்.  முதல் கட்ட பிரேத பரிசோதனையில் சரியான தகவல் அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து 2வது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் மாணவி கற்பழித்து  கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.  இதுபற்றி சி.பி.சிஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாயாவதி அரசு உத்தரவிட்டது. 

இதையொட்டி நடந்த விசாரணையில் தடயங்களை  அழிக்க  முற்பட்டதாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பி.கே.சிங் உள்பட 4 போலீசாரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த கொலை பற்றி மாநில அரசின் விசாரணை முறையாக இருக்காது என்றும் எனவே இந்த கொலை பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

சிந்திக்கவும்: இந்தியாவில் போலீஸ் துறை என்பது பயங்கரவாதிகள் நிறைந்த ஒரு துறை. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளில் போலீஸ் என்றால் பொது மக்களுக்கு சேவை செய்பவர்கள்.


அங்குள்ள போலீஸ் காரர்கள் பொதுமக்களுக்கு கொடுக்கும் மரியாதை இருக்கிறதே அதை எழுத்தால் வடிக்க முடியாது, அது போல் நீங்கள் வழக்கு பதிவு செய்ய காவல் நிலையம் சென்றால் உங்களுக்கு கொடுக்கும் மரியாதை சொல்லி மாளாது.

நீங்கள் 911 போலீஸ்க்கு போன் செய்தால், 5  நிமிடத்திற்குள் வந்து நிற்ப்பார்கள். அதுபோல் நீங்கள் ட்ராபிக் விதிகளை மீறி விட்டால் உங்களிடம் விசாரிக்கும் மரியாதை இருக்கிறதே அதற்க்கு 100  ஓ போடணும்.

நம்ம ஊரு போலீஸ் இருக்கிறதே மரியாதை  கெட்ட நாய்கள் என்று சொல்லணும், இவர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளமும்,  அது பத்தாது என்று லாஞ்சமும் வாங்கி  குடி, விபச்சாரம்,  இப்படி தொந்தி கொளுத்து மக்களை இவர்கள் நடத்தும் விதம் இருக்கிறதே சொல்லி மாளாது.  இந்த கலுசடை நாய்கள்தான் இப்படி ஒரு பச்சை மண்ணை கெடுத்து கொலையும் செய்துள்ளது. இவர்களை நடுரோட்டில் வைத்து சுட்டு கொல்ல
வேண்டும்.


No comments:

Post a Comment