Wednesday, June 15, 2011

தமிழகத்தில் நான்கு பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

கோவை: தமிழகத்தில் நான்கு பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாகரத்தை ரத்து செய்ய அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.


இதுதவிர 26 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தரும் முடிவையும் அது நிறுத்தி வைத்துள்ளது.

1. ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி
2. டாக்டர் ஜி.யு.போப் என்ஜினீயரிங் கல்லூரி
3. பத்மாவதி என்ஜினீயரிங் கல்லூரி
4. வி.கே.கே.விஜயன் என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரமே தற்போது ரத்தாகியுள்ளது.

ஏஐசிடிஇ இந்த முடிவை திங்கள்கிழமை எடுத்து தனது இணையதளம் மூலம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த கல்லூரிகளுக்கு அரசுக் கோட்டாவின் கீழ் இடம் ஒதுக்கப்பட மாட்டாது. அதேசமயம், கல்லூரிக் கோட்டா மூலம் ஏற்கனவே இங்கு படிக்க பெரும் பணம் கொடுத்து அட்மிஷன் வாங்கியுள்ள மாணவ, மாணவியரின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுதவிர அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ள 26 கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment