Saturday, June 11, 2011

மகாராஷ்டிரம்: கால்வாயில் கிடந்த 9 பெண் சிசுக்களின் உடல்கள்!

மும்பை: மகாராஷ்டிரத்தில் பீட் மாவட்டத்தில் ஒரு கால்வாயில் 9 பெண் சிசுக்களின் உடல்கள் கிடந்தன.

ஆனால், 2 சிசுக்களின் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இந்த உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்தபோது அவை 4 மாதம், 5 மாதமே ஆன சிசுக்கள் என்று தெரியவந்துள்ளது.

வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று தெரிந்தவுடன், சிசுவை அபார்ஷன் செய்து, உடல்களை கால்வாயில் போட்டுள்ளனர். இந்த பாதக செயலை செய்தது ஏதாவது மருத்துவமனையா அல்லது தனி நபர்கள் யாருமா என்று தெரியவில்லை.


இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரத்திலேயே மிகக் குறைவான பெண் குழந்தைகள் உள்ள மாவட்டம் பீட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 1000 ஆண் குழந்தைகளுக்கு 801 பெண் குழந்தைகளே உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 1000 ஆண் குழந்தைகளுக்கு 883 பெண் குழந்தைகள் என்ற நிலை உள்ளது.

இந்த மாவட்டத்தில் ஸ்கேன் செய்து வளரும் சிசுவின் பாலினத்தை அறிந்து அது பெண் குழந்தையாக இருந்தால் அதை அபார்ஷன் செய்வது மிக அதிகமாக உள்ளது.

No comments:

Post a Comment