Saturday, June 4, 2011

துனிசியா கடலில் லிபியா அகதிகள் கப்பல் மூழ்கியது; 150 பேர் பலி


லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக நடைபெறும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. எனவே, அங்கிருந்து ஏராளமான மக்கள் வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். அதுபோன்று சுமார் 900 பேர் இத்தாலிக்கு சொந்தமான லாம்பேடூசா தீவில் தஞ்சம் அடைய ஒரு கப்பலில் அதிகமாக புறப்பட்டு சென்றனர். அவர்களது கப்பல் துனிசியாவின் கடல் எல்லையில் சென்றபோது தண்ணீரில் மூழ்கியது.

அதில் பயணம் செய்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்ததும் துனிசியா கடற்பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 600 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் 150 பேர் மூழ்கி பலியானார்கள். அவர்களின் பிணங்கள் மீட்கப்பட்டன.
மேலும் 150 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்று தெரிய வில்லை. கப்பல் மூழ்கிய தற்கு மோசமான வானிலையே காரணம் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment