Wednesday, June 15, 2011

அமெரிக்க நாடாளுமன்ற இணைய தளத்திற்குள் ஊடுருவிய "ஹேக்கர்ஸ்'

வாஷிங்டன், ஜூன் 14: அமெரிக்க நாடாளுமன்ற இணைதளத்தை ஊடுருவி அதிலுள்ள தகவல்களை ஒரு கும்பல் திருடியுள்ளது.

கணினி மற்றும் இணையதளத்தில் முக்கிய தகவல்களை, வைரûஸ பரப்பி அழிப்பது, அவற்றை திருடுவது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரிய தகவல்கள் இல்லாமல் அத்துறைக்கு பெரும்பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 மிகவும் பாதுகாப்பான முறையில் அமெரிக்காவுக்கு பல நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட ராணுவ ரகசியங்கள், தூதர்களின் கருத்துகள் போன்றவற்றை ஹேக் செய்து ஸ்விஸ் பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்ஜே விக்கிலீஸ் இணையதளத்தில் வெளியிட்டு அமெரிக்காவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.








 இதே பாணியில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவிய ஒரு கும்பல், அதிலிருந்த முக்கிய தகவல்கள் அனைத்தையும் சுரண்டி எடுத்துள்ளது. அவற்றை "லல்ஸ் செக்யூரிட்டி' என்ற அமைப்பு திருடி, லல்ஸ் செக்யூரிட்டி.காம் என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
"" இது அமெரிக்காவுக்கு எதிரான போர். அமெரிக்காவை எங்களுக்கு பிடிக்கவில்லை. நாடாளுமன்ற தகவல்கள் எவ்வளவு பாதுகாப்பாற்ற முறையில் உள்ளன என்பதை உணர்த்தவே இதை செய்தோம்.'' என்று "லல்ஸ் செக்யூரிட்டி'தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற சர்வரில் அனுமதியின்றி யாரோ நுழைந்துள்ளதை செனட் கம்ப்யூட்டர் செக்யூரிட்டி அதிகாரிகள் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ரகசிய தகவல்கள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் கூறினர். அமெரிக்காவின் தீவிர பாதுகாப்புக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே இது கருதப்படுகிறது.



No comments:

Post a Comment