Saturday, October 26, 2013

சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி : 50% மானியம்!

சென்னை: வீட்டில் பொருத்தக்கூடிய வகையில் உள்ள சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி பெற விரும்புவோர், தமிழக அரசு அறிவித்துள்ள 20,000 ஆயிரம் ரூபாய் மானியத்தை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.     




கடந்த ஏப்ரம் மாதம் முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்த அறிவிப்பின் படி, ஒரு கிலோ வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட  வீட்டில் பொருத்தப்படும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் சாதனங்களுக்கு தமிழக அரசு வழங்க இருக்கிற 20,000 ரூபாய் மானியத்திற்கு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமையிடம் விண்ணப்பத்தை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இதற்கான விண்ணப்பங்களை ஆன் லைனில் மூலம் பதிவு செய்து விட்டு, பின்னர் கையெழுத்திட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமைக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழக அரசின் மானியத்தோடு, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 30,000 ரூபாய் மானியத்தை இத்திட்டத்திற்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment