Friday, October 18, 2013

முஸ்லிம்களைக் கவர உருவம் மாறும் மோடியும், தொடரும் பா.ஜ.க.வின் முஸ்லிம் விரோதமும்!

புதுடெல்லி: பிரதமர் பதவி வேட்பாளர் என்ற பட்டத்தைச் சுமந்து கனவில் மிதக்கும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை இகழ் நரேந்திர மோடி முஸ்லிம்களைக் கவர பல தந்திரங்களையும் மேற்கொண்டு வருகிறார்.
2002-ஆம் ஆண்டு முஸ்லிம் இனப்படுகொலையின் இரத்தக் கறையை மூடி மறைக்க முஸ்லிம்கள் அணியும் ஆடைகளை மோடி தற்போது அணிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஷெர்வாணி அணிந்து மோடி பல மேடைகளில் தோன்றுகிறார்.


ஆனால், வாக்குகளைப் பெற மோடி வேடம் மாறினாலும், பா.ஜ.க.வுக்கு தனது ஹிந்துத்துவா அஜண்டாவை மூடி மறைக்க இயலவில்லை. முஸ்லிம் எதிர்ப்பு கட்டுரைகள் இன்னமும் பா.ஜ.க.வின் இணையதளங்களில் காணப்படுகிறது.
3 மாதங்களுக்கு முன்பு மோடி அஹ்மதாபாத்தில் அழைப்பு விடுத்த முஸ்லிம்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்ட ஸக்காத் ஃபவுண்டேஷன் தலைவர் டாக்டர் ஸெய்யித் ஸஃபர் மஹ்மூத் இந்தக் கட்டுரைகளில் முஸ்லிம் விரோதப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார்.
‘ஹிந்துத்துவா எ க்ரேட் நேஷனல் ஐடியாலஜி’, ‘கிவ் அஸ் திஸ் டே அவர் சென்ஸ் ஆஃப் மிஷன்’, ‘செமிட்டிக் மோனோதிஸம்’ ஆகிய கட்டுரைகளில் இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வுகள் காணப்படுகின்றன.
முஸ்லிம் துவேஷத்தை எடுத்தியம்பும் இக்கட்டுரைகள் குறித்து ஸஃபர் மஹ்மூத் எழுப்பிய கேள்விகளுக்கு மோடியால் பதில் அளிக்க முடியவில்லை. முஸ்லிம் தலைவர்கள் எழுப்பிய பிரச்னைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மோடி கூறினார்.
ஆனால், முஸ்லிம்களைக் கவர மோடி பல வேடங்களைப் போட்டாலும், சங்க் பரிவாரக் கும்பல்களால் முஸ்லிம், இஸ்லாம் விரோதத்தை மூடி மறைக்க இயலாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

No comments:

Post a Comment