Saturday, October 5, 2013

ஏமாளிகள் பட்டியலில் இந்தியா!

Oct 03/2013: இங்கிலாந்தைச் சேர்ந்த நீதிமன்றம் ஒன்று போலியான வெடிகுண்டு கண்டறியும் கருவியை பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு விறபனை செய்த குளோபல் டெக்னிக்கல் எனும் தனியார் நிறுவனத்தின் அதிபர் கேரி போல்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.

ஒரு ப்ளாஸ்டிக் கைப்பிடி, ஒரு ஏரியல், ஒரு ஆன்டெனாவை கொண்டிருக்கும் இந்த சாதாரண கருவியை தயாரிக்க 1.83 பவுண்டுகள் (183 ரூபாய்) செலவாகும். வெறும் 183 ரூபாய்க்கு உற்பத்தி செய்த இந்த டுபாக்கூர் கருவியை பல்வேறு நாடுகளுக்கும் 15,000 பவுண்டுகள் (சுமார் 15 லட்சம் ரூபாய்) விலைக்கு விற்றிருக்கிறது இந்த நிறுவனம். இந்த கருவியை பல்வேறு நாடுகள் தங்கள் பாதுகாப்புத் துறைக்கு வாங்கிக் குவித்துள்ளன. அந்த ஏமாளிகள் பட்டியலில் இந்தியாவும் உண்டு.



கோல்ஃப் விளையாடும் போது காணாமல் போகும் பந்துகளை கண்டுபிடிக்க உதவும் கருவியைக் காட்டி இதை வைத்து மறைத்து வைத்துள்ள வெடிகுண்டுகள் மற்றும் போதை பொருட்களை கண்டறியலாம் என்று சந்தைப் படுத்துகிறார். இங்கிலாந்து அரசின் முக்கிய துறைகளான ராணுவ அமைச்சகம், வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, என மூன்று துறைகளும் போட்டி போட்டுக் கொண்டு குளோபல் டெக்னிகல் நிறுவனத்தை ஊக்குவித்துள்ளன.


இந்த வழக்கு விசாரணையின் போது இங்கிலாந்து அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை குளோபல் டெக்னிகல் நிறுவனத்திற்கு ஆதரவளித்ததை ஒப்புக்கொண்டுள்ளது. பெரும் சர்ச்சையையும் இங்கிலாந்து நாட்டிற்கு அவமானத்தையும் கொடுத்திருக்கும் இந்த செயல் நாடாளுமன்றத்திலும் கடுமையான விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒரு தனியார் நிறுவனம் லாபமீட்ட மக்கள் வரிப் பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை. மறுபுறம் இந்த போலிக் கருவிகளை வாங்கிய இந்தியா மாதிரியான நாடுகளின் நிலை வெட்கக் கேடானது 

No comments:

Post a Comment