Thursday, October 24, 2013

மஹராஷ்ட்ராவில் வறுமைக் கோட்டின் கீழ் 60 சதவீத முஸ்லிம்கள்!

மும்பை: மஹராஷ்ட்ரா மாநிலத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் முஸ்லிம்களில் 60 சதவீதம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக மாநிலஅரசு நியமித்த கமிட்டியின் அறிக்கை கூறுகிறது.




கிராமங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 59.40 சதவீதம் பேரும், நகரங்களில் வாழும் முஸ்லிம்களில் 59.80 சதவீதம் பேரும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்போது 25 சதவீதம் முஸ்லிம்கள் வறுமைக்கோட்டின் மேல் சிரமத்திற்கு மத்தியில் வாழ்க்கையை நடத்துவதாக ஓய்வு பெற்ற சிவில் சர்வீஸ் அதிகாரியான மஹ்பூப் ரஹ்மான் தலைமை வகிக்கும் அரசு பேனல் கூறுகிறது.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மஹ்பூப் ரஹ்மான் தலைமையில் முஸ்லிம்களின் கல்வி-சமூக-பொருளாதார துறைகளில் பிற்படுத்தப்பட்ட நிலையைக் குறித்து ஆராய ஒரு பேனலை அரசு நியமித்தது.
சில தினங்களுக்கு முன்பு இந்த பேனலின் அறிக்கை மஹராஷ்ட்ரா முதல்வர் பிருதிவிராஜ் சவானிடம் அளிக்கப்பட்டது. அறிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளின் மீது நடவடிக்கை எடுக்கும் முன்னர் அரசு அதனை பரிசோதிக்கும் எனவும் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மஹராஷ்ட்ரா மாநிலத்தில் 70 சதவீத முஸ்லிம்களும் கிராமங்களில் வாழுகின்றனர். அவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னை இருப்பிட வசதியாகும் என்று அறிக்கை கூறுகிறது.
மீதமுள்ள 30 சதவீத முஸ்லிம்களும் மத்திய-மாநில அரசுகளின் வறுமை ஒழிப்பு திட்டங்களில் அதிருப்தியாக உள்ளனர். முஸ்லிம்களுக்கு கட்டாயமாக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். குறைந்தது 8 சதவீதமாவது தொழில்துறைகள் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை கற்றுக் கொடுக்கும் நிறுவனங்களிலும் வழங்கப்பட வேண்டும் என்று பேனல் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

No comments:

Post a Comment