Monday, October 28, 2013

முஸஃபர் நகர்: கிராமவாசிகள் உதவியுடன் வீடுகளை கட்டும் பாதிக்கப்பட்ட மக்கள்!

முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பா.ஜ.க.வும், காங்கிரசும் அரசியல் நாடகம் நடத்தி வரும் வேளையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்க்கையை புனரமைக்க அவர்களே தீர்மானித்துள்ளனர்.




முஸஃபர் நகர் மாவட்ட தலைநகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காம்பூர் கிராமத்தில் கிராமவாசிகள் இலவசமாக வழங்கிய நிலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை கட்டி வருகின்றார்கள்.

கலவரம் நிகழ்ந்து பல மாதங்கள் கழிந்த பிறகும் மாநில அரசு போதிய மறுவாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடாததால் பாதிக்கப்பட்ட மக்களே தங்களது மறுவாழ்வுக்கு துவக்கம் குறித்துள்ளனர்.

கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட லிஸாட், லாக், தாவ்டி, குத்பா, குதுபி ஆகிய கிராமங்களில் இருந்து அகதிகளாக தங்கியுள்ள 130 ஆண்கள் வீடுகளை கட்டி வருகின்றனர்.
சில மாதங்களில் பூர்த்தியாகவிருக்கும் இப்பணியின் மூலம் 100 குடும்பங்கள் வசிக்க முடியும். ஜம்இயத்துல் உலமாயே ஹிந்த் இந்த பணிகளுக்கு தலைமை வகிக்கிறது.



காம்பூர் ஜம்இயத் காலனி என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மறுவாழ்வு பணிகளை அரசு மேற்கொள்ளாததால் தாங்கள் அதனை மேற்கொள்வதாக ஜம்இயத்தின் மாவட்ட தலைவர் நாஸர் முஹம்மது தெரிவித்தார்.

கலவரம் நிகழ்ந்த 2 மாதங்கள் கழிந்த பிறகும் அரசு உதவி எதுவும் செய்யவில்லை. சொந்த நிலங்களை விற்றும் பலர் பணம் அளித்துள்ளனர். இது போன்ற காலனிகள் பாசிக்கலான், காம்கேடா, கேதி ஃபிரோஸாபாத் ஆகிய இடங்களிலும் கட்டப்பட்டு வருகின்றன.

மறுபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமான நிவாரணப் பொருட்கள் வழங்குவது உட்பட அனைத்துவிதமான நிவாரணப் பணிகளையும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment