Tuesday, October 29, 2013

டெங்கு காய்ச்சல் ; எப்படி பரவுகிறது ?வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தீர்ப்பது எப்படி

தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.முத்துப்பேட்டையில் அதிகமான குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதுப்பற்றி முத்துப்பேட்டை  மருத்துவர் K.சதாம்  ஹுசைன்  இந்நோய் வருவது எதனால் ?, எப்படி பரவுகிறது ?, இந்நோய் வராமல் தடுப்பது எப்படி?, நோய் வந்தால் தீர்ப்பது எப்படி என்பவற்றை நம்மிடம் விளக்கமாக பேசினார். 






டெங்கு ப்ளேவ் வைரசால் உருவாகிறது. இந்த வைரஸ் கொசுக்களிடம் அதிகமாகவுள்ளது. கொசுக்கள் நல்ல நீரில் உருவாகிறது. அதோடு குளம், குட்டை, சாலைகளில், பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கியிருக்கும் நீரிலும் இந்த வைரஸ் உருவாகும். இந்த வைரஸின் உடலில் உள்ள கிருமி மனிதனை கடிக்கும் போது டெங்கு காய்ச்சலாக உருவாகும்.

இந்த காய்ச்சலை ஆரம்பித்திலேயே மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும். அதோடு டெங்கு காய்ச்சல் வந்தால் காய்ச்சல் அதிகமாக இருக்கும், உடம்பு வலி அதிகமாகிவிடும், கண் சிவந்துவிடும், முதுகு வலி, எலும்புவலி அதிகமாக இருக்கும், சாப்பாடு ஏற்றுக்கொள்ளாது. 




டெங்கு காய்ச்சல் வந்தவரை கொசு கடித்து விட்டு அதே கொசு காய்ச்சல் இல்லாத வேறு ஒருவரை கடித்தால் அவர்களுக்கும் டெங்கு வந்துவிடும். மற்றப்படி இருமல், சளி, எச்சில், தொடுவதால் டெங்கு பரவாது. 

டெங்கு காய்ச்சலுக்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளவிட்டால் நோய் முற்றிவிடும். இதனை டெங்கு எமாரஜி ஃபீவர் என அழைப்பார்கள். நோய் முற்றி விட்டால், மனித உடலின் துவாரங்களில் அதாவது மூக்கு, காசு, தொப்புள், ஆசனவாய் போன்றவைகளில் இருந்து ரத்த கசிவு ஏற்படும். 




டெங்கு பரவாமல் தடுக்க முதலில் கொசுவை ஒழிக்க வேண்டும். அதற்கு வீடுகள், சாலைகள், தண்ணீர் டேங்குகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பீ.டி என்கிற கொசு மருந்து, அபேட் என்கிற மருந்தை தண்ணீர் தொட்டிகளில் கலக்க வேண்டும். இதன் மூலம் கொசு உற்பத்தி தடுக்கப்படும். பைத்ரியோ ரம் என்ற கொசு மருந்தை அடித்தால் கொசுக்கள் அழிந்து விடும்.
டெங்கு காய்ச்சல் வந்தால் முதலில் காய்ச்சலை தடுக்க ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை மாத்திரை தந்துக்கொண்டேயிருக்க வேண்டும். உடலுக்கு நீர் ஆகாறத்து தந்துக்கொண்டே இருக்க வேண்டும். உடலுக்கு சக்தி தந்துகொண்டேயிருக்க வேண்டும் என்றார். 


முடிவு : மக்களிடம் டெங்கு பற்றிய விழிப்புணர்வு வரவேண்டும். கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மக்களின் ஒத்தொழைப்பு இருந்தால் மட்டுமே டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். பள்ளி மாணவ-மாணவிகள், சுய உதவிக்குழுக்கள் நடத்தும் ஊர்வலங்கள், அவர்கள் தரும் நோட்டீஸ்களை பெற்று அதனை படித்து அதன் படி செயல்பட்டால் கொசுக்களை ஒழிக்க முடியும், டெங்கு வராமல் தடுக்க முடியும். வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும் என்றார். 

No comments:

Post a Comment