Tuesday, October 22, 2013

முத்துப்பேட்டையில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சியா…? தடுக்குமா தமிழக அரசு…?

முத்துப்பேட்டை தர்காவுக்கு எதிர்புறம் உள்ள தொழுகை பள்ளிக்கு பின்புறம் உள்ள குளத்தின் மேல் கரையில் பட்டாமணியார்   ஜீவனந்ததிர்க்கு சொந்தமான இடம் உள்ளது.அந்த இடத்தில் இன்று(20.10.13) பகல் 3 மணியளவில் பாண்டியன் என்கிற சேகர் பூமி அதிர்ந்து சூலம்   வெளிப்பட்டதாக கதை கட்ட,    திட்டமிட்டபடி கிராமமக்கள் போர்வையில் மதவாத பாரதிய ஜனதாவினர் அந்த இடத்தை தோண்டி பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.அப்படி சிலைகள் இருந்தால் அந்த இடத்தில் நாங்கள் கோவில் கட்டுவோம் என்று கலவரத்திற்கான விதையை விதைத்தார்கள்.

தர்கா பகுதி முஸ்லிம்கள் தரப்போ முன்பே திட்டமிட்டு பூமிக்குள் சிலையை புதைத்துவிட்டு தற்பொழுது பிரச்சனையை கிளப்புவதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.   அவர்களின் அச்சம் நியாமானதே தமிழகத்தின் பல பகுதிகளில் இது போல் நடந்துள்ளது.    அதில் முக்கியமானது சென்னையில் நடந்த திடீர் பிள்ளையார் சம்பவம்.அன்றைய திமுக அரசு காலதாமதமின்றி உறுதியான நடவடிக்கை எடுத்து,கலவரம் நடத்த திட்டமிட்டிருந்த இந்து முன்னணியினரின் சதியை முறியடித்தது.
இந்நிலையில் இருதரப்பும் காவல்துறையில் புகார்  அளித்துள்ளனர். காவல்துறையும்,  வருவாய்துறையும்,இரண்டுநாள் கழித்து தோண்டலாம் என்று அறிவுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சூலத்தை(சூலத்துடன் தாசில்தார்)வருவாய்துறையினர் வசம் வைத்துள்ளனர்.
அதோடு பாண்டியன் என்கிற சேகர் சற்று மனநிலை இறுக்கம் கொண்டவர் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய நாம்:அந்த சூலம் எங்கு திருடப்பட்டிருக்கிறது என்பதை முதலில் விசாரித்தாலே பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்துவிடலாம் என்றும்,பாண்டியனை தூண்டி கலவரத்திற்கு வித்திடுபவர்கள் மீது யார் என்பதையும் கண்டறிந்துவிடலாம் என்ற நமது கோணத்தை தெரிவித்தோம்.
தமிழக அரசு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி உடனடியாக தீர்வு காண வேண்டுகிறோம்.
-முஹம்மது ஷிப்லி.
நன்றி:muthupet news 

No comments:

Post a Comment