Tuesday, October 22, 2013

உருவம் மாறினாலும் தனது அஜண்டாவை மறைக்க இயலாத மோடி???


பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் என்ற பட்டத்தை சுமந்து இந்தியா முழுவதும் வலம்வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன் மீது படிந்துள்ள இனப்படுகொலை கறையை துடைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.




அனைத்து தரப்பு மக்களையும் குறிப்பாக முஸ்லிம்களை கவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். 25 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை கொண்ட முஸ்லிம்களின் வாக்குகளே இதற்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். உ.பி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தலித் மக்களுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை கொண்ட மக்கள் முஸ்லிம்களாக இருப்பதால் அவர்களின் வாக்குகளை கவர மோடி முடிவுசெய்து பல தந்திரங்களையும் மேற்கொண்டு வருகிறார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் இனப்படுகொலையின் இரத்தக் கறையை மூடி மறைக்க முஸ்லிம்கள் அணியும் ஆடைகளை மோடி தற்போது அணிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஷெர்வாணி அணிந்து மோடி பல மேடைகளில் தோன்றுகிறார். இருப்பினும் அவரால் தனது ஹிந்துத்துவா அஜண்டாவை மூடி மறைக்க இயலவில்லை.

ஒருபுறம் பலதரப்பட்ட மக்களை கவர முயற்சி மேற்கொள்ளும் மோடி ஈடுபடும்போது மறுபுறம் முஸ்லிம் எதிர்ப்பு கட்டுரைகள் இன்னமும் பா.ஜ.கவின் இணையதளங்களில் காணப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் மோடி அஹ்மதாபாத்தில் அழைப்புவிடுத்த முஸ்லிம்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்ட ஸக்காத் ஃபவுண்டேசன் தலைவர் டாக்டர் ஸய்யித் ஸஃபர் மஹ்மூத் இந்த கட்டுரைகளில் முஸ்லிம் விரோதப் போக்கை வெளிச்சம்போட்டு காட்டியிருந்தார்.




“ஹிந்துத்துவா எ க்ரேட் நேசனல் ஐடியாலஜி’, கிவ் அஸ் திஸ் டே அவர் சென்ஸ் ஆஃப் மிஷன்”, “செமிட்டிக் மோனோதிஸம்” ஆகிய கட்டுரைகளில் இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் துவேஷத்தை எடுத்தியம்பும் இக்கட்டுரைகள் குறித்து ஸஃபர் மஹ்மூத் எழுப்பிய கேள்விகளுக்கு மோடியால் பதில் அளிக்க முடியவில்லை. முஸ்லிம் தலைவர்கள் எழுப்பிய பிரச்சனைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மோடி கூறினார்.

ஆனால், தற்போது வரை அந்த கட்டுரைகள் குறித்து மோடி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதன்மூலம் முஸ்லிம்களை கவர மோடி பல வேடங்களைப் போட்டாலும், தனது ஹிந்துத்துவா அஜண்டாவை மூடி மறைக்க இயலாது என்பது தெளிவாகிறது எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment