Tuesday, October 29, 2013

பாட்னா குண்டுவெடிப்பு: பாரபட்சமற்ற விசாரணை தேவை! – பாப்புலர் ஃப்ரண்ட்

புதுடெல்லி: பாட்னாவில் நரேந்திர மோடி உரையாற்றவிருந்த காந்தி மைதானத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.


இச்சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட உண்மையான கரங்களை வெளிக்கொணர பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம். ஷெரீஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

குண்டுவெடிப்பை நிகழ்த்தியது எந்தக் குழுவாக இருந்தாலும் அவர்கள் நமது தேசம் மற்றும் மக்களின் நலனுக்காக பாடுபடக்கூடியவர்கள் அல்லர். மதசார்பற்ற சக்திகளின் தேர்தல் வெற்றி வாய்ப்பையும், பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் நலனையும் பலகீனப்படுத்துவதற்கே இத்தகைய நடவடிக்கைகள் உதவும்.


தற்போதை சம்பவம் பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் ஆதாயமாக அமையும். துரதிர்ஷ்டவசத்தால் விசாரணையின் விளக்கங்களுக்கு காத்திராமல் சில முக்கிய ஊடகங்கள் சொந்த முடிவுகளை எடுத்து விடுகின்றன. எவ்வித ஆதாரமுமில்லாமல் முஸஃபர் நகர் கலவரத்தை தொடர்புபடுத்த சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன.

இத்தகைய ஊகங்கள் நீதியின் அடிப்படையிலான விசாரணைக்கு உதவாது. மாறாக, சமூகத்தை இரு துருவமாக மாற்றவே உதவும்.

இவ்வாறு கே.எம். ஷெரீஃப் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment