Monday, October 28, 2013

குஜராத் இனப்படுகொலை: மோடிக்கு எதிரான மனுவில் இன்று தீர்ப்பு!

அஹ்மதாபாத்: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்.ஐ.டி.) அறிக்கைக்கு எதிராக கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த மனுவின் மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.



குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் பின்னணியில் சதித் திட்டம் இருப்பதாக ஸாகியா ஜாஃப்ரி குற்றம் சாட்டுகிறார். ஸாகியா ஜாஃப்ரியின் மனுவின் மீது மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் பி.ஜே. கணத்ரா முன்னிலையில் ஐந்து மாதமாக விசாரணை நடந்தது.


மோடிக்கும் மற்றும் சிலருக்கும் நற்சான்றிதழ் வழங்கி சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) தாக்கல் செய்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும், மோடி மற்றும் சம்பந்தப்பட்ட இதர நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் ஸாகியா தனது மனுவில் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment