Saturday, October 26, 2013

மோடி சொல்வது உண்மையா?

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும், இந்தியாவின் புதிய மீட்பராகவும் கட்சியாலும் ஊடகங்களாலும் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி
தேசிய அரசியல் களத்தில் இதுவரை, ரிவாரி முதல் திருச்சி வரை நான்கு பிரம்மாண்டமான(?) பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார்.




அக்கூட்டங்களில் பேசுகையில், "பயங்கரவாதத்தை எதிர் கொள்வதில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு தோல்வியுற்றுள்ளது" என்றும் இந்தியாவை பாரதிய ஜனதா தலைமையிலான தே.ஜ.கூட்டணி தான் காப்பாற்றும்" என்றும் கூறி வருகிறார். தனது கருத்துக்குச் சான்றாக, "அடல்பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான தே.ஜ.கூட்டணி ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதம் திறமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது" என்றும் மோடி சொல்லி வருகிறார்.

மோடியின் தகவல்கள் பெருமளவும் பொய்களாலும், அரைவேக்காட்டு உண்மைகளாலும் நிரம்பியிருக்கும்  என்பதை உணர்ந்துள்ள TruthOfGujarat என்னும் இணையதளம் மோடி கூறும் 'உண்மை'களை ஆய்வு செய்தது. அந்த ஆய்வுக்கு 1994முதல் 2013 வரையிலான இருபதாண்டு காலக்கட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இக்காலக்கட்டம் தே.ஜ.கூட்டணி மற்றும் ஐ,மு.கூட்டணி ஆகிய இரு கூட்டணி ஆட்சிகளின் காலத்தையும் உள்ளடக்கியது.

மேலும் இந்தத் தகவல்கள் அனைத்தும் தெற்காசிய பயங்கரவாத விவரங்களை உள்ளடக்கிய SATP (South Asian Terrorism Portal) எனப்படும் தளத்திலிருந்து மோதல் ஆய்வு நிறுவனம் (Institute of Conflict Management) என்னும் அமைப்பு ஆவணப்படுத்தி வைத்துள்ளது. இந்தத் தகவல் விவரங்களைக் கொண்டு, பயங்கரவாதத்தினால் பொதுமக்கள், பாதுகாப்பு ஊழியர்கள், பயங்கரவாதிகள் ஆகியோரின் இறப்பு விகிதங்கள் குறிப்பிட்டுள்ள காலக்கட்டத்திற்கானவை வரைபடமாக்கப்பட்டுள்ளன.
கீழ்க்காணும் முதற்படம் பயங்கரவாதத்தினால் இறந்துபட்ட பொதுமக்கள் குறித்த விவரமாகும்.
மேற்கண்ட படத்திலிருந்து 1999 முதல் 2004 வரையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாஜக ஆட்சிக்காலத்தில் 8120 பொதுமக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது புலனாகிறது. 1994 முதல் 2000 வரையிலும், பின்னர் 2004 முதல் 2013 வரையிலான 15 ஆண்டுக்கால ஐ.மு. கூட்டணி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதத்திற்குப் பலியான பொதுமக்களின் எண்ணிக்கை 6749 ஆகும் என்பதும் தெரியவருகிறது.

இதே காலக்கட்டங்களில், பயங்கரவாதத்திற்குப் பலியான பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கை வேறுபாடுகளைக் கீழ்வரும் படம் காண்பிக்கிறது:
ஜனதாவின் ஐந்துவருட  ஆட்சிக்காலத்தில் 24,885 பேர் பயங்கரவாதத்தின் பொருட்டு  மரணம் தழுவியுள்ளனர் என்றால்  காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதம் தீண்டி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை  17,964 என்பதைக் கீழ்க்காணும் படம் விளக்குகிறது.

பயங்கரவாத விவரணத் தளம் என்னும் தளத்திலிருந்து பெறப்பட்ட இந்தத் தகவல்கள் யாவும் முன்னாள் காவல்துறை தலைமை அதிகாரி கேபிஎஸ் கில் தலைமையில் இயங்கும் மோதல் மேலாய்வு நிறுவனம் (Institute of Conflict Management) என்னும் அமைப்பிற்குரியது என்பதும்  சந்தன் மித்ரா என்னும் பாரதியஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினர் இந்த I C M  நிர்வாக மேலாண்மைக் குழுவில் அங்கம் வகிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் படங்கள் நமக்கு உணர்த்துவது, பயங்கரவாதம் தலைவிரித்தாடியது பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் தானென்பதும், 2004 முதல் பயங்கரவாதம் சரிவைச் சந்தித்துவருகிறது என்பதையும் தான். சான்றாக, 2004  ஆம் ஆண்டு  நிகழ்ந்த பயங்கரவாதச் சாவுகள் 2642 என்பதும், 2013 ஆம் ஆண்டு பயங்கரவாதச் சாவுகள் 691 என்பதும் பயங்கரவாதத்தின் சரிவைக் காட்டுவதாகவே உள்ளது. அல்லாமல், மோடியின் கூற்று "பயங்கரவாதத்தை தே.ஜ.கூ அரசே கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது" என்பது வழமையான அபத்தக் கூற்றே என்பதும் நிரூபணமாகிறது.

மற்ற அம்சங்களைப் போலவே, பயங்கரவாதத்தை நறுக்கும் அம்சத்திலும் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு சரியான தேர்வாக ஆகாது என்பதையும் இந்த விவரங்கள் காட்சிப்படுத்தி நிற்கின்றன.

மேற்கண்ட தகவல்களின் அட்டவணை கீழ்வருமாறு:


ஆக, பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைவது இந்திய நலனுக்கு எதிரானதும், இந்தியர் அழிவுக்கு வழிவகுப்பதுமாகும் என்றால் அது மிகையில்லை.

நன்றி: Truth of gujarat இணையதளம்.
தமிழில்: இ.ஹ

No comments:

Post a Comment