Tuesday, October 22, 2013

புதையல் வேட்டை: மோடி திடீர் "பல்டி"

பொய்களையே மூலதனமாக கொண்டு இந்தியா முழுவதும் பிரசாரம் செய்துவரும் மோடி.கிண்டல் அடிகிரியன் என்ற பெயரில் தற்போது சர்ச்சையில் மாட்டிக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார் 
உத்தரப் பிரதேச கோட்டையில் தங்கப் புதையல் இருப்பதாகக் கூறிய துறவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.



கடந்த பல ஆண்டுகளாக துறவி ஷோபன் சர்க்கார் மீது லட்சக்கணக்கான மக்கள் மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் வைத்துள்ளனர். அவரது எளிமைக்கும், தியாக மனப்பான்மைக்கும் தலைவணங்குகிறேன் என டுவிட்டரில் மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்ட கருப்புப் பணம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த துறவியான ஷோபன் சர்க்கார் என்பவர் "பிரிட்டிஷாரிடம் போரிட்டு வீர மரணமடைந்த ராஜா ராவ் ராம்பக்ஷ் சிங் என்ற மன்னர் எனது கனவில் தோன்றினார். உன்னாவில் உள்ள கோட்டையில் 1,000 டன் தங்கத்தைப் புதைத்து வைத்திருப்பதாகக் கூறினார்' என்று குறிப்பிட்டார்.
தனது கனவு குறித்து அவர் மத்திய அமைச்சர் சரண்தாஸ் மஹந்த்திடம் எடுத்துக் கூறினாராம். இதைத் தொடர்ந்து, கோட்டையில் அகழாய்வுப் பணியை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆனால், ஆய்வுப் பணிக்கு தாங்கள் உத்தரவிடவில்லை என மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.
புதையல் வேட்டை தொடர்பாக சென்னையில் சில நாள்களுக்கு முன் பேசிய மோடி, "யாரோ ஒருவர் கனவு கண்டாராம். அதையடுத்து புதையலை அரசு தேடுவதைப் பார்த்து உலகமே சிரிக்கிறது. இதை தோண்டவே தேவையில்லை' என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, துறவி ஷோபன் சர்க்காரைப் பின்பற்றுபவர்கள் பலர், மோடிக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்தே, துறவிக்கு மோடி புகழாரம் சூட்டியதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment