Wednesday, October 23, 2013

முத்துப்பேட்டை சித்தேரி குளம் தூர்வாரும் பணி-பொதுமக்களால் தடுத்து நிறுத்தபட்டது

முத்துப்பேட்டை, அக்டோபர் 22: முத்துப்பேட்டை சாலையில் உள்ள சித்தேரிகுளம் அப்பகுதி மக்களுக்கு மிகப் பயனுள்ளதாகவும் அப்பகுதி நீர் ஆதாரமாகவும் காணப்பட்டன. மேலும் பேரூராட்சி பகுதியில் பெரும்பாலான குளங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு குளங்கள் குட்டைகளாக மாறியும் அசுத்தமாக காட்சி அளிப்பதாலும் மக்கள் பயன்பதாட்டிற்கு ஆகாமல் போனது.






 இந்த நிலையில் சித்தேரிக்குளம் பேரூராட்சியில் கனவு குளம் போல் காணப்பட்டன. இந்த குளம் சென்ற ஆண்டு குத்தகை எடுத்த குத்தகைகார் மீன் பிடிப்பதாக கூறி குளத்தை அசுத்மாக்கி மக்கள் பயன்படுத்த முடியாமல் ஆனது. ஆதனால் முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் பொது நிதியிலிருந்து குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து கடந்த ஆண்டில் மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு சரசெய்ய ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.



 அதன்படி சில தினங்களுக்கு முன்பு ஒப்பந்தக்காரர் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர் வாறும் பணியை மேற்கொண்டார். குளம் மக்கள் பயன்படுத்தமுடியாத அளவிற்கு அதில் வெட்டப்பட்ட மணல்களை மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் கொட்டப்பட்டு குளம் பார்க்க படு மோசமாக காணப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு பணியை நிறுத்தினர்.

 பணியும் அதோடு நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஆனது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்;ந்த சதீஸ்குமார் கூறுகையில் குளத்தை தூர்வாறுகிறேன் என்ற பெயரில் பெயரளவில் குளத்தை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு வீணாக்கிவிட்டார்கள். முறையாக பணிகள் நடைபெறவில்லை. அதனால் பணியை தடுத்து நிறுத்திவிட்டோம். இந்த குளத்தை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு விணாக்கிய ஒப்பந்தகாரரிடமிருந்து நஷ்டஈடு தொகை பேரூராட்சி நிர்வாகம் வசூல் செய்ய வேண்டும் என்றார்.

நன்றி :muthupetexpress

No comments:

Post a Comment