Saturday, October 5, 2013

ஏன் இந்த பில்டப்! ஏன் இந்த பித்தலாட்டம்!

oct 04/2013: ஒரு வழியாக நரபலி மோடி குறித்து காவிகளும், மீடியாக்களும் கொடுத்த பில்டப்கள் கடந்த 26.09.13 வியாழன் இரவோடு மோடி மாநாடு முடிந்ததோடு முடிவுக்கு வந்தது. 

மோடியின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முப்பதாயிரம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்; நாற்பதாயிரம்; ஐம்பதாயிரம் என்று சொல்லிக்கொண்டே போய் கடைசியில் ஒரு லட்சமாகி அது இறுதியில் ஒன்றரை லட்சம் பேரில் வந்து நின்றது. ஒன்றரை லட்சம் பேர் ரூ10 கட்டணமாகக் கட்டி ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்துள்ளார்கள் என்று மோடி மஸ்தான் வேலையை காவிக் கயவர்களோடு சேர்ந்து கொண்டு மீடியாக் கயவர்களும் அரங்கேற்றினர். 




ஆனால் வந்த கூட்டத்தின் அளவு என்ன? சுமார் 15ஆயிரத்திற்கு நெருக்கமான அளவிலான இருக்கைகளே வாடகைக்கு எடுக்கப்பட்டு அதிலும் அந்த இருக்கைகளும் கூட முழுவதுமாக நிரப்ப வழியில்லாமல் பல இருக்கைகள் காலியானதாக இருந்ததும், அந்த இருக்கைகளையும் மாநாட்டுத் திடலை நிரப்பும் அளவிற்கு போட்டாக வேண்டும் என்ற அடிப்படையில் மிகுந்த டைவெளிவிட்டு போட்டு, அவைகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான இடைவெளிவிட்டு மாநாட்டு திடலை இருக்கைகளால் நிரப்ப படுபிரயத்தனம் எடுத்துள்ளது காவிக்கூட்டம் என்பது அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவைக் காணும்போது நன்றாகத் தெரிந்தது. 

கூட்டம் கூடியது போல காட்டுவதற்காக எவ்வித மாயா ஜாலங்களை ல்லாம் காட்டுவதற்கு இவர்கள் முயற்சித்துள்ளார்கள் என்ற விஷயம் இதன் மூலம் அம்பலத்திற்கு வந்தது. அடுத்ததாக கூடிய கூட்டம் குறித்து மீடியாக்கள் காவிக் கயவர்களுக்கு ஆதரவாக ஜால்ரா தட்டினர். ஆரம்பத்தில் இரண்டு லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறியவர்கள் மறுகணமே சில நிமிடத்துளிகளில் நாலரை லட்சம் பேர் கூடியதாக நாக்கூசாமல் புளுகித் தள்ளினர். உத்தரகாண்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களை பத்து டாடா சுமோ காரில் போய் காப்பாற்றியதாக கதை விட்ட இந்தக் கயவர்களுக்கு பத்தாயிரத்தை நாலரை லட்சமாகச் சித்தரிப்பது சின்ன விஷயம் தான். 

ரஜினி காந்த் தனது ரசிகர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டு ரஜினியின் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்தும் பதினைந்தாயிரம் பேரைத் தான் கூட்ட முடிந்தது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஜினிகாந்த் நிகழ்ச்சி முடிந்ததும் மோடியை சந்திக்க திருச்சியில் முகாமிட்டுள்ளார் என்று இவர்கள் பரப்பினார்கள். தனது ரசிகர்கள் கூடினாலே ஐம்பதாயிரம் பேர் வந்திருக்க வேண்டுமே? நம் ரசிகர்கள் கூட நரபலி மோடியை ஏற்கவில்லை என்பதை இந்தக் கூட்டத்தில் இருந்து ரஜினி மதிப்பிட்டதில் இருந்தும் இதை அறியலாம். இதனால் தான் திருச்சியில் முகாமிட்டுள்ளதாக இவர்கள் சொன்னபடி ரஜினிகாந்த் மோடியை சந்திக்காமலே நழுவிவிட்டார். 

மேலும் பச்சைமுத்து என்ற சாதிக்கட்சி நடத்தும் பாரி வேந்தர் கல்லூரியில் இருந்து மாணவர்களை அனுப்பியும் பேருந்துகளைக் கொடுத்தும் பதினைந்தாயிரம் பேர்தான் வந்தனர் என்றால் பீஜேபிக்காக மோடிக்காக வந்தவர்கள் ஆயிரம் கூட தேற மாட்டார்கள் என்பது உறுதியாகும். நாம் அறை கூவலாகவே சொல்ளாம். அந்த இடத்துக்கு நாங்கள் வருகிறோம். தினத்தந்தியும், லோட்டஸ் டிவியும், பாஜகவும் சொன்னது போல் நாலரை லட்சம் சேர்களை போட்டுக் காட்டினால் மோடியே பிரதமராக நாமும்ஆதரிக்ளாம். அவ்வளவு வேண்டாம் ஆன்லைனில் பதிவு செய்த இரண்டரை லட்சம் பேருக்கு இரண்டரை லட்சம் சேர்களைப் போட்டுக் காட்டினால் கூட போதும். நாமும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்களாம். 

No comments:

Post a Comment