Saturday, October 12, 2013

முஸ்லிம்களை வாக்கு வங்கிகளாகவே பார்க்கின்றார்கள்! – முஸீருல் ஹஸன்

அவுரங்காபாத்: அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களை வாக்கு வங்கிகளாகவே பார்க்கின்றார்கள் என்று ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் முஸீருல் ஹஸன் கூறியுள்ளார். இதனால் முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் பின் தங்கியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

செண்டர் ஃபார் ப்ரமோஷன் ஆஃப் டெமோக்ரஸி அண்ட் செக்குரலிசம், மவ்லானா ஆஸாத் செயர், பாபா சாகிப் அம்பேத்கர் மாரத்வாடா பல்கலைக்கழக அரசியல் துறை ஆகியன ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்திய முஸ்லிம்களைக் குறித்த கருத்தரங்கில் முஸீருல் ஹஸன் உரையாற்றினார்.
அவர் மேலும் கூறுகையில்,“அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களை விட முஸ்லிம்கள் நிலை மோசமாக உள்ளதாக சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டுகிறது. ஆனால், அரசியல் துணிவு இல்லாததால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment