Thursday, October 3, 2013

அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும்: ஷிண்டேவின் கருத்துக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு!

புதுடெல்லி: அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதை மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் கருத்து சரியான முடிவு என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம். அப்துல் ஸலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:


அரசு இந்த முடிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இது விஷயத்தில் அரசு கடந்த காலங்களில் எடுத்த தவறான முடிவுக்கு, இது மாற்று வழியை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.
மேலும், உள்துறை அமைச்சகம் காவல்துறையின் சொந்த தவறுகளால் சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது பிணையில் விட வேண்டும். இது போன்று பொய்யான குற்றங்களால் சிறையில் இருந்து வெளிவந்தவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், உள்துறை அமைச்சருக்கு நினைவுபடுத்திக் கொள்ள விரும்புவது என்னவென்றால், மக்களை பாதிக்கும் கருப்புச் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். இதனால், காவல்துறையினர் அப்பாவிகளுக்கு எதிராக போடக்கூடிய பொய்யான வழக்குகள் குறையும். இதை அரசுகள் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தாமல் மக்களின் நலன்களுக்காக செய்ய வேண்டும்.
ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை சக்திப்படுத்த அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முழு ஆதரவளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment