முஸஃபர்நகர்: முஸஃபர்நகர் கலவர வழக்கு விசாரணையை காணொளி காட்சி (வீடியோ கான்ஃப்ரன்சிங்) மூலம் விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் கெஷல் ராஜ் சர்மா செய்தியாளர்களிடம் புதன்கிழமை இதைத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், முஸஃபர்நகரில் அண்மையில் சங்க் பரிவார்கள் ஜாட் இனத்தவர்களின் துணையோடு நடத்திய கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், சுரேஷ் ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கலவரம் தொடர்பாக போலி விடியோவை பதிவேற்றம் செய்ததுடன் பதற்றத்தைத் தூண்டும் வகையில் பேசினார் என சங்கீத் சோம் மீதும், பதற்றத்தைத் தூண்டும் வகையில் பேசினார் என்று சுரேஷ் ராணா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கீத் சோம் உராய் மாவட்ட சிறையிலும், சுரேஷ் ராணா பாந்தா மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதைக் கருத்தில்கொண்டு இருவரிடமும் சிறையிலிருந்தபடியே விடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கே.பி. சிங் முடிவு செய்வார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) நடைபெறுகிறது.
No comments:
Post a Comment