Wednesday, October 2, 2013

வி.ஹெச்.பி. பயங்கரவாதிகளிடமிருந்து கொலைகார ஆயுதங்கள் பறிமுதல்!

நீமுச்: மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள நீமுச் நகரத்தில் வி.ஹெச்.பி. பயங்கரவாதிகளிடமிருந்து கொலைகார ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நகரில் சஞ்சீவனி காலனி பகுதியிலுள்ள ஒரு வீட்டிலிருந்து கூர்மையான வாள்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மண்டசூர் டவுனிலிருந்து ஒரு வி.ஹெச்.பி. தலைவர் இந்த ஆயுதங்களை கொண்டு வந்ததாகவும், ஆனால் தாங்கள் வருவதற்குள் அவர் தப்பித்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


“பெருமளவில் கூர்மையான ஆயுதங்களும்,
அவற்றை கூர்மைப்படுத்தும் இயந்திரமும் இந்த வீட்டுக்கு கடத்தப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் நாங்கள் இந்த வீட்டை சோதனையிட்டோம்” என்று நகர எஸ்.பி. பங்கஜ் தீக்ஷித் செய்தியாளர்களிடம் கூறினார். “மொத்தம் 50 வாள்களும், ஒரு கூர்மைப்படுத்தும் இயந்திரமும் கைப்பற்றப் பட்டுள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மகேஷ் குர்ஜார், மெக்ராஜ் லோகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வி.ஹெச்.பி.யின் பொறுப்பாளர் நிர்மல்தேவ் நரேலா போலீசார் வருவதை அறிந்தவுடன் தப்பித்துவிட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் போலீசுக்கு அளித்த வாக்குமூலத்தில், “இந்த ஆயுதங்களை நரேலா, ஷ்யாம்  பெஹெல்வான் ஆகிய இருவர் மண்டசூர் டவுனிலிருந்து கொண்டு வந்தனர்” என்று கூறியுள்ளனர்.
தலைமறைவாக இருக்கும் இவர்களைப் பிடிக்கும் வேலை மும்முரமாக நடைபெறுகின்றது. அவர்களுக்கெதிராக ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“நரேலாவுக்கேதிராக ஏற்கனவே நிறைய வழக்குகள் நீமுச் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று எஸ்.பி. தீக்ஷித் கூறினார்.

No comments:

Post a Comment